மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு..!
மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். புனானி, மயிலதென்ன, அத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், மீன்பிடிப்பதற்காக மீன்பிடி வலையை எடுத்து சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் நீதவான் பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.