Monday, March 16, 2026
No menu items!

பெண்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: குற்றத்துக்கு உதவியதாக 32 வயது பெண் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் இந்த பெண் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை எளிதாக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு அவர் வாகனம் ஒன்றை வழங்கியதோடு,...

அவிசாவெல்ல நீதிமன்றத்தில் போலி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது!

அவிசாவெல்ல நீதிமன்ற வளாகத்திற்குள் போலி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அக்டோபர் 27ஆம் திகதி (திங்கட்கிழமை) நடைபெற்றது. நீதிமன்ற வளாக நுழைவாயிலில் வழக்கமான சோதனையின் போது, பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்ணின் கைப்பையில் துப்பாக்கி போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து கைது...

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை – பெண் ஒருவர் கைது!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாவது, சந்தேகநபரிடமிருந்து 5,350 மில்லி கிராம் ‘ஜஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூ. 3 இலட்சத்து 61...

உடுதும்பர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய குடும்பத் தற்கொலை முயற்சி!

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். இது  தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவரது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் 12, 10 மற்றும் 5...

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்; கணவன் கைது!

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரே குழந்தையின் தாயாவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ சேவைகள் அதிகாரியாகப்...

சிகிரியா கண்ணாடிச் சுவரில் பெயர் எழுதியதால் 21 வயது பெண் கைது!

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியதற்காகப் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 சட்டவிரோத பாம்புகள் மீட்பு – பெண் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் பசுமை...

யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் சுபாஷினி எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!

மட்டக்களப்பு - மகிழவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தமது 3 வயதுக் குழந்தையுடன் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் காட்டு யானை, தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது குறித்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாரவிலவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது பெண் உயிரிழப்பு !

மாரவில, மரந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்னாலிருந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான பிள்ளையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights