திருகோணமலை கிதுல்வுதுவில் பகுதியில் பேருந்துடன் – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு!
திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மொரவெவ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பஸ்ஸுடன், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதாக
கிளிநொச்சியில் ஆசிரியர் தீயிட்டு தற்கொலை!
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள ஆசிரியர் விடுதியில், ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் உடல் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!
கம்பஹா அகரவிட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் கம்பஹா அகரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றனர். உந்துருளி உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை சேர்ந்த இருவரை இலக்கு
ஆற்றில் மிதந்த மனித கால் – மக்கள் பதற்றம்..!
அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28/02/2025) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்று பகல் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில்
11 வயது மாணவனுக்கு நடந்த பெரும் சோகம்!
பொலன்னறுவை, தல்பொத பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் ஒருவர், பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்த கால்பந்து கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவையில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் கவிந்து தெனுவன், நேற்று மாலை தனது அக்காவின் விளையாட்டுப் போட்டியைக் காணத் தனது தாயாருடன் பொலன்னறுவை தோபாவெவ மகா வித்தியாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் விபத்து !
புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் இதய நோயாளி என்றும், பஸ்
மாத்தளை பொது வைத்தியசாலையில் போலி வைத்தியர் ஒருவர் கைது!
மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேக நபரின், நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் காவல்துறையினரிடம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் உயிரிழந்துள்ளார்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவரும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வைத்தியசாலை தரப்பினரின்
மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு !
சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு “உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நேற்று (10.10) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய உளநல பிரிவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து!
கொழும்பு பிரதான வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, பஸ்ஸில் பயணித்த இரு பாடசாலை மாணவர்களும்