மட்டக்களப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் சனிக்கிழமை (01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் காந்திபூங்காவிற்கு முன்னால் இடம்பெற்றது. ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய
களுதாவளையில் பாதசாரிக் கடவையில் விபத்து – தாய், பாடசாலை மாணவி படுகாயம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இரா.கிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை(15.10.2025) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உட்பட இருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் குறுக்கீடு செய்தவேளை தீடீரென வந்த
மட்டக்களப்பில் கார் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் !
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் இன்று (14) ஒரு கார் வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரில் மூன்று பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், சம்பவ தொடர்பான விசாரணைகளை
முன்னாள் எம்.பி காலமானார்!!!
மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. தன்மன்பிள்ளை கனகசபை காலமானார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) 86 வயது மூப்பால் காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த இவர், 86வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். தன்மன்பிள்ளை கனகசபை, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு, அதிகூடிய
இன்றைய நாளுக்கான வானிலை!
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய
இன்றைய நாளுக்கான வானிலை!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மட்டக்களப்பில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் – சமுதாய பிரச்சனையாக மாற்றம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகின்ற நிலைபேறு கவலைக்குரியதாக இருக்கின்றது என புற்றுநோய் தடுப்பு சங்கத் தலைவர் மற்றும் வைத்தியர் பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார். இன்று (அகஸ்ட் 5), மட்டக்களப்பில் நடத்தப்பட்ட நடமாடும் வைத்திய முகாமில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த முகாம் மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயக்குநர் வைத்தியர்
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!
மட்டக்களப்பு – மகிழவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தமது 3 வயதுக் குழந்தையுடன் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் காட்டு யானை, தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது குறித்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் மூதாட்டியிடம் ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி பறிப்பு!
மட்டக்களப்பு நல்லையா வீதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற வன்முறையுடனான தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், 78 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது வீட்டின் முற்றத்தில் சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்து, அவரை வீதியில் தள்ளி
யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம்…!
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம்(10) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,