வாகன இறக்குமதிக்கு தடையில்லை – மத்திய வங்கி ஆளுநர் உறுதி!
வாகன இறக்குமதியைக் வரையறுப்பதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், முதல் காலாண்டில் பதிவானதை போன்று இரண்டாவது காலாண்டிலும் அதே வீதத்தில் வளர்ச்சியடையும், எனவும் அவர்
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 22 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 346.58 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 283.13 பில்லியனாக காணப்பட்டது.
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு!
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது. இது 0.1 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்ட போதிலும் அதிக இலாபத்தை பெற்ற மின்சார சபை!
மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை மின்சார சபையின் குறுகிய கால கடன்கள் மற்றும் பொறுப்புகள் 2024 ஆம் ஆண்டில் 123.6 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது என
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 16 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக்
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
ஒரு லட்சத்து 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்
திறைசேரி உண்டியல்கள் பற்றிய இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!
1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக்
இலங்கையில் அதிகரித்துள்ள கிரெடிட் கார்டு பாவனை..!
2024 டிசம்பரில் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளது, நவம்பரில் 1,951,654 ஆக இருந்த மொத்த செயலில் உள்ள கார்டுகளின் எண்ணிக்கை 1,970,130 ஆக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இது 2023 டிசம்பரில் 1,917,085 கார்டுகளுடன் ஒப்பிடும்போது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது. கிரெடிட் கார்டுகளில் நிலுவைத் தொகையும் அதிகரித்து, நவம்பரில் ரூ.151,614 மில்லியனாக இருந்த நிலையில், டிசம்பர்
மத்திய வங்கிக்கு முன்னால் பங்குதாரர்கள் குழு போராட்டம்..!
On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு முறையை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். On Max DT பிரமிட் நிதி முதலீட்டு வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் டுபாயில் கைது
இன்றைய நாணயமாற்று வீதம்!
இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 301 ரூபாய் 20 சதம், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 13 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 73