வவுனியா - மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தானது நேற்று மாலை வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது
இந்த விபத்தில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் -நானாட்டான் பிரதேச சபையில் சுயாதீன இளைஞர் குழுவாக போட்டியிட்ட சுயேட்சை குழுவினர் தமது ஆதரவை ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக சுயாதீன இளைஞர் குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்றைய தினம் (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல கட்சிகள் தங்களிடம் ஆதரவு கோரி இருந்த...
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (6) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம...
மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று (10) மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று தெரிய வருகிறது.
குறித்த சந்தேக நபர்களை மாவட்ட குற்ற...
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
மன்னார் நகர சபை
(ITAK) இலங்கை...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு பதிவுகள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது.
மன்னார் நகர சபை ,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி...
மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் இன்று சனிக்கிழமை (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர்...
ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதினால் அது அவர்களின் தவறு என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.ஆகவே இனப்பிரச்சினை இருக்கின்றது.அதனை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.
இனவாதத்தை ஒழிப்போம் என்று மீண்டும் எங்கள் மீது எமது மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு இந்த அரசாங்கம்...
மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் நேற்றைய தினம் மே தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.
அதனடிப்படையில் மன்னார் வங்காலை கிராம மக்கள், இம் முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள்...
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் வட மாகாண பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
இந்த...