சிறுநீரக நோயின் அறிகுறிகள்!
சிறுநீரகம் (Kidney) என்பது நம் உடலின் நச்சுகளை வடிகட்டி, நீர் மற்றும் உப்புச் சமநிலையை பராமரித்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பு. ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்படும்போது, உடல் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் தோன்றத் தொடங்கும். அவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்கவில்லை என்றால், தீவிர நிலைக்கு மாறி உயிருக்கு ஆபத்தாகலாம். சிறுநீரக நோயின் பொதுவான 23 அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!
சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த வர்த்தகரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகநபரிடமிருந்து 330 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அத்துடன் குறித்த நபரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர்
சிறைச்சாலை வைத்தியசாலையில் துமிந்த அனுமதி..!
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.