மீனவர்கள்
புதிய செய்திகள்
தலைமன்னாரில் வைத்து 10 இந்திய மீனவர்கள் கைது!
தலைமன்னாருக்கு தெற்காகவுள்ள கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கைதான மீனவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டுச்செய்திகள்
இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்..!
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் பதற்றம் – இந்திய மீனவர்கள் இருவர் காயம்..!
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று (1/28/2025)அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில்...
புதிய செய்திகள்
கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை; மு.க ஸ்டாலின்!
இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல்...
உள்நாட்டுச்செய்திகள்
களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்..!
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இன்று (1/17/2025) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்றையதினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் நீலக் கலரில் கூம்பக...
புதிய செய்திகள்
யாழில் கரை ஒதுங்கிய இறந்த ஆமைகள்!
யாழ்ப்பாணத்தில் உள்ள கேசுவரினா, கோவலன் மற்றும் காரைநகர் கடற்கரைகளில் 100க்கும் மேற்பட்ட இறந்த ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளது மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இச் சம்பவம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இந்திய வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட மீன்பிடி சாதனங்களாலேயே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
காயமடைந்த சில ஆமைகள் காணப்பட்டன, உயிருள்ளவை கடற்படை...
உள்நாட்டுச்செய்திகள்
ரின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை..!
ரின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
VAT வரி குறைக்கப்படாவிட்டால்...
உள்நாட்டுச்செய்திகள்
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தும் அர்ச்சுனா எம்.பி..!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர்அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் உள்ளிட்ட சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக...
புதிய செய்திகள்
இலங்கை மீனவர்கள் மீது குற்றம் சுமத்தும் நாகை மீனவர்கள்..!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20.12.2024) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21.12.2024) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 2 படகில் வந்த 6 இலங்கை...
உள்நாட்டுச்செய்திகள்
மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!
மட்டக்களப்பு, முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13.12.2024) காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திராய்மடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முகத்துவாரம் பகுதியில்...
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


