யாழில் இடம்பெறும் குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஆனந்த விஜேபால..!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை விற்று
லொறி மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்து – ஒருவர் பலி..!!
கண்டி – யாழ்ப்பாணம் வீதி, பெரியகுளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் – இருவர் கைது!
யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று (03) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோது, அவர்களிடம் 3,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், ஐந்து சந்தி
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்படையினர் இன்று (நவம்பர் 3) காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று படகுகளில் எல்லை தாண்டி வந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு
யாழில் வெற்றிலை துப்ப முயன்ற நபர் பலி..!!
யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 22ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது மழை பெய்து கொண்டிருந்த வேளை வெற்றிலை துப்புவதற்காக
வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் துறை சார் வல்லுநர்கள் கலந்துரையாடல்!
வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான இடர்பாடுகள் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. வட மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் வரவு
யாழ்ப்பாணம் 2026 உலகச் சுற்றுலா நகரங்களில் முன்னணி இடத்தில்!
உலகளாவிய பயண ஊடக நிறுவனம் லோன்லி பிளானட் 2026 ஆம் ஆண்டில் பார்வையிடத்தக்க சிறந்த நகரங்களில் யாழ்ப்பாணத்தை ஒன்றாக தேர்வு செய்துள்ளது. அத்தியாவசியமாக, யாழ்ப்பாணம் தனித்துவமான கலாசார பாரம்பரியத்தையும், வரலாற்றுப் பெருமைகளையும் கொண்டதாகும். இதனால் உலக சுற்றுலா மதிப்பீட்டாளர்களிடையே யாழ்ப்பாணம் மீண்டும் முக்கிய ஈர்ப்புக் கோரிக்கையாளர் நகரமாக திகழ்கிறது. இந்த அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை அதிகரிப்பதோடு, சுற்றுலாப் பயணிகளின்
யாழ். துப்பாக்கி சூடு தொடர்பில் வெளியான தகவல்..!!
கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய் வாய்ப்பட்டு இறந்ததாகவும் , இளைஞனே உழைத்து தனது குடும்பத்தினரை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் ஒருவர் காயம்!!
யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப்பகுதியில் நேற்று (24) இரவு ஒரு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பொலிஸார் இடைமறிந்த போது, உழவு இயந்திரம் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்றுள்ளது. இதனையடுத்து, பொலிஸார்
யாழில் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்..!!
போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் சிறு குற்றங்களை தடுக்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் புதிய அவசர சேவை தொடங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில், இச் சேவை இன்று சம்பிரதாயபூர்வமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பொதுமக்கள், 021–222 2221 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து முறையிட்டால், பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பர்