உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்..!
உள்ளூராட்சித் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மாத்தளை பொலிஸ் பிரிவில் இருந்து மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவே அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3 முறைப்பாடுகளும் கெபிதிகொல்லாவ, பொலனறுவை மற்றும் மொனராகலை பொலிஸ் பிரிவுகளிலிருந்து பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மேலும்,
வாகனங்களை வாங்குபவர்களுக்கு அறிவிப்பு
வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போது சிசிடிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார் போக்குவரத்துத் துறையில்