உணவு ஒவ்வாமையால் 100 பேர் வைத்தியசாலையில்..!
ஸ்ரீபாத நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய வருடாந்த திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 100 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் பலர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 40 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மஸ்கெலியா பிரதேச வைத்திய நிர்வாகம் […]