பயன்படுத்தப்படாத விமானங்களுக்கு தவணைப்பணம் செலுத்தப்பட்டுள்ளது; ஹர்ஷன சூரியப்பெரும!
பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்கு பலவருடங்களாக மாதாந்தம் 9 இலட்சம் டொலர் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த மூன்று விமானங்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று தெரிவித்தார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார். மேலும், தற்போது ஸ்ரீலங்கன் விமானச் சேவையில் மொத்தம் 22
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து வெளியான தகவல்..!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு
கபில சந்திரசேன மற்றும் உதயங்க வீரதுங்கவிற்கு அமெரிக்கா விதித்த தடை..!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று
கொள்கை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்த அலி சப்ரி!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை உதாரணமாகக் காட்டி, கொள்கை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். ‘எக்ஸ்’ க்கு எடுத்துச் சென்ற முன்னாள் அமைச்சர் கூறியதாவது; “இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்வதில் கொள்கை முரண்பாடானது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது”. “ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவை இந்திய அரசாங்கம்
16 தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகர்..!
சட்டவிரோதமான முறையில் நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (13.08) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் இன்று காலை 6 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க
விமானச் சேவைகள் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!
விமானச் சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை, மாறாக மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க முடியும் என்றும், அதற்காக இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை.!அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு..!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்பதற்கான முதல் அடியை
ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய அறிவிப்பு
மார்ச் மாதம் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலை மனுக்கள் கோரப்படும் என துறைமுக, கடல்மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்கள்
மூடப்படும் அபாயத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்..!
ஸ்ரீலங்கன் விமான சேவையை இயக்க முடியாத பட்சத்தில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் விமான நிலையத்தை கொள்வனவு செய்ய அதானி நிறுவனம் மட்டுமன்றி சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் காத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள்
மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்
வாள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பன பதிக்கப்பட்ட பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று (29) அதிகாலை 05.05 மணி அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான