Tuesday, June 9, 2026
No menu items!

இந்திய மீனவர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி – ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு..!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம்...

சிறை சென்ற சிறீதரன் – இந்திய மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடல்.!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு...

மீனவர்களின் மாபெரும் போராட்டம்..!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (2/27/2025) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பமாகியநிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக யாழ். இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்றது. யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு 5...

கைதான 32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..!

தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23/02/2025) உத்தரவிட்டார். தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்  பகுதியை சேர்ந்த...

இந்திய மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைகள்..!

கடந்த (09.02.2025) மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் (2/19/2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 மீனவர்கள் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த 11மீனவர்கள் மீது ஐந்து  குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில்...

மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சாடும் அன்னராசா..!

ஜனாதிபதி அனுர யாழ் வருகையும் அதன் போது அவர் ஆற்றிய உரையில் வடக்கில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பேசினார். இந்திய மீனவர்களுடனான பிரச்சினை பற்றி மாத்திரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் இன்று (29) உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காயம் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இந்திய மீனவர்களை பார்வையிட்ட இந்திய துணைத்தூதுவர்..!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 34 இந்திய மீனவர்கள் கைது!  

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில்...

இலங்கை கடற்படையினரால் அதிரடியாக இந்திய மீனவர்கள் கைது..!

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த மீனவர்களுடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த வழமையான கண்காணிப்பு நடவடிக்கையின்போது, குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய...
- Advertisement -spot_img

Latest News

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway...
- Advertisement -spot_img