பொதுவாகவே தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் வேலைக்கு செல்வதால் அதிகமான வீடுகளில் வாஷிங் மெஷின்களின் பாவனை அதிகரித்து வருகின்றது.
ஆனால் நம்மில் பலரும் வாஷிங் மெஷின்களில் துணிகளை சலவை செய்யும் போது அறியாமல் சில தவறுகளை செய்துவிடுகின்றோம்.
அது ஆடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பல நேரங்களில் சலவை இயந்திரத்துக்கும் பாதிப்பாகவே அமைகின்றது.
சலவை இயந்திரத்தில் துணிகளை துவைக்க போடும் போது கைவினை ஆடைகள் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளை போடுவது வாஷிங் மெஷின்களின் ஆயுள் காலத்தை குறைத்துவிடும்.இது மட்டுமன்றி ஆடைகளிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
ஓட்டப் பயிற்சியின் போது நாம் பயன்படுத்தும் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ள காலணிகள் மற்றும் லெதர் சப்பாத்துக்களை வாஷிங் மெஷின்களில் போட்டு சலவை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இது வாஷிங் மெஷின்களை விரைவில் பழுதடைய செய்யும்.
ஆடைகளில் கறைகள் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருந்தால் அதனை முறையாக நீக்கிவிட்டு வாஷிங் மெஷின்களில் துணிகளை துவைக்க வேண்டும்.இல்லாவிடில் அனைத்து துணிகளிலும் கறைபடியும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மிகவும் சிறிய ஆடைகளை வாஷிங் மெஷின்களில் துவைப்பது சில சமயம் வாஷிங் மெஷின்களில் சிக்கிக்கொள்ள வாய்பை ஏற்படுத்துவதுடன் வாஷிங் மெஷின்களின் பாவனை காலத்தையும் குறைத்து விடுகின்றது.
மேலும் ஆடைகளில் வித்தியாசமான பெரிய பட்டன்கள் மற்றும் அலங்கார பொருட்கள் பதிக்கப்பட்டிருந்தால் அதனை வாஷிங் மெஷின்களில் சலவை செய்ய கூடாது. இந்த விடயங்கள் வாஷிங் மெஷின்களின் பாவனை காலத்தில் தாக்கம் செலுத்துவதுடன் ஆடைகளையும் விரைவில் கந்தல் ஆக்கிவிடுகின்றது.