Tamil News Channel

Wild Life Photographer ஆக மாறிய பிரபல நடிகை… யார் தெரியுமா.!

satha4

திரைப்படங்களைில் நடிப்பதை தவிர்த்து தனது முழு கவனத்தையும் வைல்ட்லைப் போட்டோகிராபியின் மீது செலுத்தியுள்ள பிரபல நடிகையின் வைல்ட்லைப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

குறித்த நடிகை கையில் கேமராவை எடுத்துக்கொண்டு காடுகளுக்கு சென்று சிங்கம், புலி, யானை, மற்றும் பறவைகள் என விதவிதமாக வைல்ட்லைப் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகின்றார். அவர் வேறு யாரும் இல்லை ஜெயம் திரைப்பட நடிகை சதா தான்.

சதா கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சதா. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும்.

இதைத்தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சதா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பிஸி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த சதா, சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்நிலையில் தனது முழு கவனத்தையும் வைல்ட்லைப் புகைப்படங்கள் எடுப்பதில் செலுத்தி வருகின்றார். இன்னும் சொல்லப்போனால் முழுநேர வைல்டுலைப் போட்டோகிராபராகவே மாறிவிட்டார் சதா. குறித்த புகைப்படங்கள் இணையத்திதில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *