November 13, 2025
YouTube-யின் புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள்: இனி 18+ க்கு மட்டுமே அனுமதி..!
தொழில் நுட்பம்

YouTube-யின் புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள்: இனி 18+ க்கு மட்டுமே அனுமதி..!

Jun 19, 2024

யூடியூப் நிறுவனம் துப்பாக்கி வீடியோக்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது.

இளைய யூடியூப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையில், துப்பாக்கி தொடர்பான உள்ளடக்கத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை இந்த வாரம் யூடியூப் அறிவித்தது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளம், துப்பாக்கிகளில் இருந்து பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை விளக்கும் வீடியோக்களை இப்போது தடை செய்யும்.

மேலும், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சில துணைக்கருவிகள் ஆகியவற்றைக் காட்டும் வீடியோக்களை 18 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்களுக்கே கிடைக்கச் செய்யும் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கி பாதுகாப்பு ஆதரவாளர்களின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பிறகு இந்த மாற்றங்கள் ஜூன் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கட்டுப்பாடு இல்லாத துப்பாக்கி உள்ளடக்கம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், உணர்ச்சி ரீதியான துன்பத்தை ஏற்படுத்தும் அல்லது வன்முறை நடத்தைக்கு கூட வழிவகுக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

துப்பாக்கிகளை நேரடியாக விற்பனை செய்யும் அல்லது அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து பார்வையாளர்களுக்கு கற்றுத்தரும் உள்ளடக்கத்தை யூடியூப் ஏற்கனவே தடை செய்துள்ளது.

மேலும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நேரலை ஸ்ட்ரீமிங் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *