Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ, தனது கண்களில் உள்ள கெமராக்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதற்கு திறன் கொண்டுள்ளதுடன் AI அல்காரிதம்கள் மற்றும் ரோபோ கைகளை பயன்படுத்தி நேர்த்தியாக வரைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.












