போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை..!!
நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் கூறியுள்ளார். பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல!!!..
சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல. சப்புகஸ்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய சபாநாயகர் சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் நேற்றையதினம் (11.12.2025) இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக
மருத்துவம் ஆரம்பம் டித்வா சூறாவளியின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு..!!!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டற்காக, அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை(13.12.2025)முதல் மூன்று நாள் நடமாடும் மருத்துவமனையை மன்னாரில் தொடங்கவுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குமார இதனைத் கூறியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நடந்த கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் மேலும் அவர்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட கயந்த கருணாதிலக்க..!!
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான காலத்தில்
அனர்த்த நிவாரண விநியோத்தில் ஏற்பட்ட முரண்பாடு வீடியோ குறித்து பொலிசார் கூறியது..!!!.
பொலீசாருக்கு எதிராக மந்தாரநுவர குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்தியதாகக் கூறும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது குறித்து இலங்கை பொலீஸ் விளக்கம் கூறியுள்ளது. . பொலீஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்துப்படி, காவல்துறையினர் குடியிருப்பாளர்களுடன் மோதியதாகவோ அல்லது உதவி விநியோகத்தில் தலையிட்டதாகவோ தவறான விளக்கங்களுடன் இந்த காணொளி பரவப்பட்டுள்ளது. மந்தாரநுவர காவல்துறையின் பொறுப்பதிகாரி (OIC)யிடமிருந்து பெறப்பட்ட உள் அறிக்கையைத் தொடர்ந்து பொலீசாரால் விளக்கம்
வவுனியாவில் அறிமுகமாகும் தடை!
வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு
வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்ற அதிகாரிகள்…….!
அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் சுமார் 200 பேர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை (Government vehicle Permit) விற்பனை செய்துள்ளதாக பத்திரிக்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களைப் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் இரண்டு தொடக்கம் மூன்று இலட்சங்களுக்கு, வாகன
சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி….!
யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு இல்லாத வெளிநாட்டு