யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று!
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 23 ஆசனங்களைக் கொண்டிருக்கும் தரப்பே ஆட்சியமைக்க முடியும். எனினும், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத நிலையில், கட்சிகள் கூட்டணிகளை அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக்
வெளியிடப்பட்டுள்ள விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை !
விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, மயில்கள் – 4.24 மில்லியன் குரங்குகள் – 1.74 மில்லியன் மர அணில்கள் – 2.26 மில்லியன் செங்குரங்குகள் – 5.17 மில்லியன் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து இராஜினாமா
ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP!
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவானார்.
அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய SJB!
அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மூன்று வாக்குகளை அதிகமாக பெற்று அக்குரணை பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார். அக்குரணை பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள்
மனைவியை தீ வைத்து எரித்த கணவன்; சிலாபத்தில் கொடூரச் சம்பவம்!
சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்து இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் குறித்த கணவர் தனது மனைவியை தீ வைத்து எரித்துள்ளார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (11)
புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! – ஜனாதிபதி உத்தரவு
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும், முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி
நாடு முழுவதும் ஆயுதப் படைகள்!!!
நாடு முழுவதும் பொதுப் பாதுகாப்புக்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04.06.2024) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!
நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழை காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றுள், 6 மரணங்கள் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ளன. 18 மாவட்டங்களின் 171 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,610 குடும்பங்களைச் சேர்ந்த 43,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய
வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்ற அதிகாரிகள்…….!
அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் சுமார் 200 பேர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை (Government vehicle Permit) விற்பனை செய்துள்ளதாக பத்திரிக்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களைப் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் இரண்டு தொடக்கம் மூன்று இலட்சங்களுக்கு, வாகன