நாம் கனவு காண்பது இயல்பானதுதான். ஆனால், சில கனவுகள் நமக்கு நன்மை வரப்போவதை உணர்த்தும். சில கனவுகள் தீமை ஏற்படப் போவதை எச்சரிக்கும்.

அந்த வகையில் சில பொருட்களை கனவில் கண்டால், நமக்கு செல்வம் பெருகும் என்று அர்த்தம்.

மழை பெய்வதைப் போல் கனவு

மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட மழை அடிக்கப் போகிறது என்று அர்த்தம். வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் வருகை அமையப் போகிறது.

உண்ணுதல்

உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவுகளை கனவில் கண்டால் உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் என்று அர்த்தம். மேலும் மன திருப்தி அதிகரிக்கும்.

தாமரை

மகாலட்சுமியின் அம்சமான தாமரையைக் கண்டால், லட்சுமி தேவியின் நல்லாசி உங்களுக்குக் கிடைக்கப் போகிறது என அர்த்தம். இதனால் உங்கள் நிதி நிலை உயரும். கடன் பிரச்சினை தீரும்.

பால் குளியல்

பாலில் குளிப்பதைப் போன்று கனவு கண்டால், பாரியளவில் பண சேமிப்பும் நிதி நன்மையும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here