July 14, 2025
வடக்கு மாகாண  ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

வடக்கு மாகாண ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.!

Jul 3, 2024

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கி வைத்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *