Tamil News Channel

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்பு இருக்கா ? இன்று முருகனை வழிப்பட்டால் என்ன பலன்?

வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.விசாக நட்சத்திர ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும்.

முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும். ஆறுமுகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும்.

இந்த அற்புத வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் அதே வேளை எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.

இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் ராமலட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு மற்றும் அவரின் அருமை பெருமைகளை விளக்கி கூறுவது போல அமைந்திருக்கும். இதனை கேட்பவர்களுக்கு அவர்களின் பாவம் நீங்கி புண்ணியத்தை அடைவார்கள் என்றும், இந்த நிகழ்வை குமார சம்பவம் என வால்மீகி குறிப்பிடுவார்.

இதை தழுவியே வட மொழி கவிஞர்கள் குறிப்பாக காளிதாசர் முருகப்பெருமானின் அவதாரம் குறித்து அவரின் நூலான குமார சம்பவம் என்று குறிப்பிடுகிறார்.

நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.

இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts