ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் தனித்துவ தன்மைகளும் விசேட பண்புகளும் காணப்படுகின்றது. ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த ஆளுமை பண்புகளை கொண்டவர்களாகவும் தலைமை பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். இப்படி முதளாளிகளாக வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவம் தைரியம் கொண்டவர்களாகவும் வசீகர தோற்றத் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு தலைமைதத்துவ பண்புகள் இயல்பாகவே காணப்படுவதனால் வாழ்க்கை முழுவதும் முதலாளிகளாக வாழும் யோகம் இவர்களுக்கு அமையும்.

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக விடாமுயற்ச்சியுடன் செயற்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வியாபாரம் மற்றும் நிறுவன முகாமைத்துவம் போன்ற விடயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும். தொழில் துறையில் இவர்கள் பாரிய வளர்ச்சியடைய கூடிய நிலை காணப்படுகின்றது.

சிம்ம ராசி பெண்கள் மிகவும் நுண்ணறிவு கொண்டவர்களாகவும் விரைவாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றலும் அடக்கியாளும் ஆற்றலும் இவர்களிடத்தில் காணப்படும். இந்த ராசி பெண்கள் வாழ்க்கை முழுதும் முதலாளியாக இருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here