எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்குவதில்லையா? கடன் பிரச்சனை ஓயவில்லையா? அதிர்ஷ்டமும், நன்மையும் கிடைக்க வேண்டுமானால், சில எளிய பரிகாரங்கள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், சில பரிகாரங்களை பார்ப்போம்.

வீட்டின் பூஜையறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ 2 யானை சிலைகளை வைக்கலாம்.. அல்லது 2 குதிரை சிலைகளையும் வைக்கலாம்.. காரணம், பணவரவை பெருக்கக்கூடிய சக்தி, இந்த சிலைகளுக்கு உள்ளன..

அதேபோல, வீட்டின் வாசலில் குதிரைப்படம் அல்லது காளைமாடு படம் வாங்கி வைக்கலாம். இதை நீங்கள் பார்க்கும்படியாக வைக்க வேண்டும். இந்த இரண்டு படங்களுக்கும் வீட்டிலுள்ள வறுமையை குறைக்கும் தன்மை உள்ளதாம். இந்த இரண்டையும் நீங்கள் தினமும் பார்த்து வருவதால், பணப்பிரச்சனை மெல்ல நீங்கும்.

பச்சை கற்பூரம்: அதேபோல, ஒரு வெள்ளை துணியை விரித்து, 1 கைப்பிடி மிளகு, 1 கைப்பிடி பச்சரிசி, பச்சை கற்பூரம் போன்றவை வைத்து முடிச்சு போல கட்டி பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். தினமும் விளக்கேற்றி வழிபடும்போது, சிக்கல்கள், பண பிரச்சனைகளை சொல்லி பிரார்த்திக்க வேண்டும். கடவுளை வணங்கியதுமே, இந்த முடிச்சியினை வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது பீரோவிலோ வைத்துவிட வேண்டும்.

இதற்கு பிறகு கடனை அடைப்பதற்கான முயற்சியில் நீங்கள் இறங்கினால், உரிய பலன் விரைவில் கிடைக்குமாம். 1 மாதம் கழித்து, இந்த முடிச்சினை ஓடும் நீரில் விட்டுவிடலாம். இப்படி 3 மாதங்களுக்கு செய்து வரும்போது, கடன் பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் பணவரவு பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here