வாழ்க்கையில் எல்லா விடயத்திலும் ஜெயிக்க வேண்டும். எந்த தீங்கும் எம்மை நெருங்க கூடாது என்பதற்காக சிலர் ராசிக்கல் மோதிரங்களை வாங்கி அணிந்து கொள்வர்.

அதேபோல் யானையின் முடியில் தயாரித்த யானை முடி மோதிரத்தையும் அணிவார்கள்.

யானை, நவகிரகங்களின் குருவின் வாகனம். அதேபோல் தங்கம் குருவுக்கு மிகவும் உகந்தது.

இந்த யானை முடி மோதிரங்கள் நமக்கெதிராக வரும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் தன்மைக் கொண்டது.

மேலும் பில்லி சூனியம், ஏவல், செய்வினை ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் தடுக்கும்.

யானை முடி மோதிரம் பாதுகாப்புக்காக அணிவது. இதை அணிந்துகொள்வதால் யானையின் பலம் கிடைத்து தைரியம் அதிகரிக்கும்.

ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் இம் மோதிரத்தை அணியலாம்.

வியாழக்கிழமைகளில் வளர்பிறையாக இருக்கும்போது இதனை அணிந்துகொள்ளலாம்.

ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்.

இம் மோதிரத்தை நடு விரலில் அணிவது சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here