நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்  அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த மின் பிறப்பாக்கியை சுன்னாகம் மத்திய மின்சார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , அதனை உடனடியாக நெடுந்தீவிற்கு எடுத்துச் சென்று சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

நெடுந்தீவில் மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கி வினைத்திறன் குறைவடைந்தமையினால் அண்மைய நாட்களாக பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டமையினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் எடுத்துவரப்பட்டுள்ள அதிசக்தி வலு கொண்ட புதிய மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்ட பின்னர் நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற முறையில் தொடர்ச்சியான மின்சாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here