ஆடி மாதத்தில் வரும் ஒவ்வெரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
நாளை அம்மனையும் முருகனையும் சேர்ந்து வழிப்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
நாளை சக்தி வாய்ந்த ஆடி வெள்ளி என்பதால் என்னவெல்லாம் செய்யலாம்? என்னென்ன வேலைகள் செய்யக்கூடாது? என்பதை பார்க்கலாம்.
- ஆடி வெள்ளிக்கிழமையில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. பொதுவாகவே எல்லா வாரத்திலும் வரும் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்பார்கள். முதல்நாளே செய்து வைப்பது சிறப்பு தரும்.
- வீட்டில் உள்ள குப்பைகளை சூரிய உதயத்திற்கு முன்பே அதாவது காலை 6 மணிக்கு முன்பே வெளியில் கொட்டி விட வேண்டும்.
- ஆடி வெள்ளியன்று எந்தவித தேவையில்லாத பொருளையும் குப்பையில் போடக்கூடாது. அது வீட்டில் இருக்கு ஐஸ்வர்யத்தை போகச்செய்து விடும்.
- நாளை உப்பு வாங்கலாம்.. ஆனால் அதை யாருக்கும் கடனாகவும் அல்லது தானமாகவும் வழங்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் நம்ம வீட்டில் உள்ள லட்சுமி தேவி வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்.
- ஆடி வெள்ளியன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள்.
மேற்கூறிய அனைத்தும் ஆடி மாதம் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் நிறைந்து இருக்கும்.





