ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பட்டல்கல பகுதியில் வைத்து 35 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளது.

விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த 70 வயது ஆண் பயணி ஒருவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் குறைந்தது 34 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 17 ஆண்கள், 14 பெண்கள், 12 வயது சிறுவன் மற்றும் 4 வயது சிறுமி ஆகியோர் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here