Friday, July 17, 2026
No menu items!

News Updates

கட்டுநாயக்கவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கி சூடு; சந்தேகநபர் கைது

கட்டுநாயக்கவில் நேற்று முன்தினம் பிற்பகல் பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் மினுவாங்கொட, தெவலபொலபகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . முன்னதாக கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான ஆரம்பகட்ட...

தேசிய மக்கள் சக்தி பிரதிநிதி பதவி விலகல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான கொழும்பு மாநகர சபையின் தலைவர் ரொபர்ட் ஹீன்கென்டா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது. ஹீன்கென்டா இதற்கு முன்னரும் பல முறை மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து, பின்னர் அந்த முடிவை மாற்றியிருந்தார் என கூறப்படுகிறது. எனினும்,...

இந்தியர்களின் விருப்பத்துக்குரிய திருமண இடமாக மாறியுள்ள இலங்கை

2025-ஆம் ஆண்டில் இந்திய தம்பதிகள் மத்தியில் இலங்கையில் திருமணம் நடத்துவதற்கான வரவேற்பு 25% அதிகரித்துள்ளதாக'' 'WedMeGood' நிறுவனத்தின் "Destination Wedding Report 2026"தெரிவிக்கிறது. இந்தியாவுக்கு அருகாமை, எளிதான பயண வசதி, சொகுசு ஹோட்டல்கள் மற்றும் அனுபவம் சார்ந்த கொண்டாட்டங்கள் காரணமாக இலங்கை வேகமாக வளரும் திருமண இடமாக மாறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய...

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பெறவுள்ளது. 5100 கோடி ரூபாய் செலவில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பானின் (JICA)ஜைக்கா அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் நன்மைகள், பதவிய,...

சுற்றுலா பொலிஸ் போன்று நடித்து பிரேசில் சுற்றுலாப் பயணியிடம் 30 லட்சம் கோரியோர் கைது

சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை தடுத்து வைத்து 30 லட்சம் ரூபாய் பெற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேரை உனவட்டுனை சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, காலி, தல்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் அறைக்குள் சுற்றுலா பொலிஸ்...

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள் மற்றும் சவால்கள் தொடர்பான விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையின், சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவர்கள் குழு...

பேருந்து சாரதிகள், நடத்துனர் மீது போதைபொருள் பரிசோதனை

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (08) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து சேவைகளின் வைத்திய பிரிவின் தலைவர் பேராசிரியர் கிளிபோட் பெரேரா, கடந்த ஆண்டு...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் தகவலின்படி, சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட...

கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரள்வு;போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று (07) மாலை 4.45 மணியளவில் ரம்பக்கனை நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் ரயில், மாலை 4.50 மணியளவில் நடைமேடைக்குள் நுழையும்போது தடம் புரண்டுள்ளது. குறித்த ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதன் காரணமாக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நான்கு நடைமேடைகள் முடங்கியுள்ளன. இந்த விபத்தினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும்...

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சம்பவம் குறித்து (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...
- Advertisement -

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...