நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர்.

அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here