மூதூர் லங்காம டிப்போவில் உள்ள தபால் வாக்களிப்பு நிலையத்தில் குறித்த டிப்போவில் பணிபுரியும் சாரதி ஒருவர் வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தபால் வாக்குச்சாவடியில் சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கடமையாற்றிய டிப்போ பிரதி முகாமையாளர் மொஹமட் அனிபா அன்வர் சதாத் மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பேரில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க மூதூர் பொலிஸார் ஏற்பாடு செய்தனர்.







