எதிர்வரும் காலத்தில் மனிதர்களை விட ரெபோக்கள் அதிகரித்துவிடுமோ? என்ற பயம் ஏற்படும் அளவுக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் நாய் உருவத்தைக் கொண்ட ரொபோக்கள் வீடுகளிலும் இராணுவத்திலும் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பானில் வாலிபர் ஒருவர் ரொபோ நாயை அழைத்துக்கொண்டு, பூங்காவுக்குச் சென்று ரொபோ நாயை இயக்கி பார்த்துள்ளார்.

அப்போது, அங்கே எஜமானர்களுடன் வந்திருந்த நிஜ நாய்கள் ரொபோ நாயைக் கண்டு பயத்தில் குரைத்துள்ளன.

ஆள விட்டா போதும் சாமி…என தலை தெறித்து ஓடுகின்றன.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரொபோ நாயைப் பார்த்து நிஜ நாய் பயப்படுவதைப் போல், ரொபோ மனிதர்களைப் பார்த்து நிஜ மனிதர்கள் பயப்படும் காலம் தொலைவில் இல்லை என்பதற்கு இதுவொரு சான்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here