ஒவ்வொரு உயிரினமும் நல்ல பலனையும் தீய பலனையும் மாறி மாறி வழங்கும்.
அதே நேரத்தில், வீட்டில் சில உயிரினங்களைப் பார்ப்பது நல்ல அறிகுறியைக் கொண்டுவருகிறது.இது வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகளைத் தருவதாகவும் நம்பப்படுகிறது.
அந்தவகையில் தற்போது ஒருவருடைய வீட்டிற்குள் பட்டாம்பூச்சி வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஒருவரின் வீட்டிற்கு வண்ணத்துப்பூச்சி வந்தால் அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

- லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் எனவும் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் வரும் என்றும் கூறப்படுகிறது.
- வீட்டில் பட்டாம்பூச்சியின் வருகை வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
- இது மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் நடக்கும் சச்சரவுகளில் இருந்தும் விடுப்படலாம்.
- உங்கள் வீட்டில் பட்டாம்பூச்சியைக் கண்டால், உங்கள் ஆசைகளில் ஒன்று விரைவில் நிறைவேறப் போகிறது என்று அர்த்தம்.
- வீட்டில் ஒரு பட்டாம்பூச்சியைக் கண்டால், அந்த நபருக்கு விரைவில் திருமண நடைபெறும் என்றும் அர்த்தம் உண்டு.
- மஞ்சள் வண்ணத்துப்பூச்சி வீட்டுக்கு வந்தால் செல்வ செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- நீல வண்ணத்துப்பூச்சியின் வருகை வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.
- வெள்ளை வண்ணத்துப்பூச்சியின் வருகை தூய்மை மற்றும் நேர்மறையைக் குறிக்கிறது.
- சிவப்பு வண்ணத்துப்பூச்சியின் வருகை ஆற்றல் மற்றும் நிதி நன்மைகளைத் தருகிறது.
- ஒருவரின் மீது பட்டாம்பூச்சி இறங்குவது அந்த நபருக்கு ஒரு நல்ல அடையாளமாக கருதப்படுகிறது.





