‘தித்வா’புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், இந்த மாத இறுதியுடன் அவசரகால ஒழுங்குவிதிகளை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.







