ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு கடை முதலாளி ஒரு வரை இன்று அதிகாலை 1.30 மணியளவில் 27 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்த லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 01.30 மணியளவில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழயை இரும்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு போதை பொருள் வியாபாரத்தில் ஈபட்டுக் கொண்டிருந்த கடை முதலாளியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 27 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சதாம் உசையின் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here