மதுவுக்கு பின்னால் மரணம்: தம்பர பகுதியில் தடியால் தாக்கப்பட்டு முதியவர் கொலை!
நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவின் தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார். தனது வீட்டில் உறவினர் ஒருவரின் மகனுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், இருவருக்கிடையிலான வாக்குவாதம் மோசமாக மாறி, அந்த நபர் தடியால் தாக்கியதனால் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது […]