மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அந்த சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவ்வாறாயின் திருத்தம் மேற்கொள்ளப்படும் முறைமை தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.








