Monday, May 25, 2026
No menu items!

News Line

மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி; சாதனை புரிந்த யாழ். பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி தனது 31வது வயதில் இவர் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12 ஆவது இடத்தை...

மண்சரிவு அனர்த்தத்தில் இருவர் பலி – பதுளையில் சம்பவம்

பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டனர். பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மண்மேடு சரிந்து...

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கம்மன - வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாடசாலை முடித்து...

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் - ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன. இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உலக...

2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.donets.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைப்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், 337956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளையும்  பரீட்சை திணைக்களம்...

பாடசாலை விபத்தில் உயிரிழந்த சிறுமி – வெல்லம்பிட்டியில் சம்பவம்

வெல்லம்பிடிய பகுதியில் குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   மேலும், இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் ஆறு வயதுடைய செஹன்சா என்ற சிறுமியியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தளம்பல் நிலை காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கமே இதற்கு காரணமாகும். இன்றைய தினம் நாட்டின் வடக்கு , வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தல் – இலங்கை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை

உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் ஆகும். இதனால் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், எனவும்...

கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம் : திருகோணமலையில் சம்பவம்

நாவிக நெவி பண்டார என்ற பெயர் வழங்கப்பட்ட கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்துள்ளார். இன்று (08) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இடம்பெற்றுள்ளது. மாத்தளை கன்தேகெதர பகுதியைச் சேர்ந்த கே. எம். டி. எஸ்.பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார். வேறு எந்த விபரங்களும் வழங்கப்படவில்லை என...

நாடு திரும்பிய குவைத்தில் பணியாற்றிய 26 இலங்கைப் பெண்கள்

விசா காலாவதியான நிலையில் குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று இலங்கை தூதரகத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர். அவர்களையும் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு...
- Advertisement -

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...