பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, பழைய போகம்பர வளாகத்தில் சிறைச்சாலை ஒன்றை அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதன் மூலம், பழைய போகம்பர வளாகம் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக சிறைச்சாலையாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அமைச்சருக்கு சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here