Sunday, November 8, 2026
No menu items!

பொலிஸார்

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு – விசாரணை தீவிரம்..!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதுவருட கொண்டாட்டத்திற்காக சென்ற தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்..!

பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் மோதியதில் 39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனும் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் நேற்று (31.12.2024) இரவு பெந்தோட்டை கடற்கரையில் இடம்பெற்ற வாணவேடிக்கையை கண்டுகளிக்கத்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக்...

வீட்டிற்குள் புகுந்து கடத்திச் செல்லப்பட்ட நபர்..!

மட்டக்குளி, சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (29.12.2024) பிற்பகல் புகுந்த குழுவினர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கடத்தலுக்கு முச்சக்கர வண்டியில் ஆறு பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல்...

முச்சக்கரவண்டி திருட்டு – ஐவர் அதிரடியாக கைது..!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பொலிஸ் பிரிவுகளில் முச்சக்கரவண்டிகளைத் திருடிய ஒருவர் மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த நால்வரும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 9 முச்சக்கரவண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர். உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர்...

கிறிஸ்தவ தேவாலயங்களில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு திறந்த வெளியில் பார்வையாளர்களை காண விசேட...

மின்கம்பியில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு..!

நிக்கொல்லாவ பிரதேசத்தில் 25 ஏக்கர் நெற்செய்கை நிலத்தில் அனுமதியற்ற மின்கம்பியில் சிக்கி தோட்டத்தில் பணியாற்றிய கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிக்கொல்லாவ, கிராமப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மின்கசிவு காரணமாக தெவஹுவ கல்பாயவில் வசித்து வந்த வி. செல்டன் பேமசிறி...

யாழில் பட்டப்பகலில் துணிகர திருட்டுச் சம்பவம்..!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி - ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 23.12.2024 திங்கட்கிழமை பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த 8பவுண் நகைகள், 200 கனேடியன் டொலர் மற்றும் 35ஆயிரம் ரூபாய் இலங்கைப் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள 45,000 பொலிஸார்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24.12.2024) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். சிவில் உடையில் சுமார் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஏனைய நகரங்களில் பாதுகாப்புக்காக 45,000...

போலி நாணயத்தாள் உபயோகம் – கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்..!

57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் வைத்திருந்த 04 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்  மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img