நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில்  100 மில்லிமீட்டருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த அறிவிப்பு இன்று (07) மாலை 5.00 மணி முதல் நாளை (08) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை, கேகாலை, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, நுவரெலியா, புத்தளம், பதுளை, கண்டி, மாத்தறை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

இந்த கனமழை காரணமாக வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும், வீதிகள் ஈரமாக இருப்பதாலும், பார்வைத்திறன் குறைவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்காங்கே கற்கள் சரிவு ஏற்படக்கூடும் என்றும், போக்குவரத்து சேவைகளுக்கு குறுகிய கால இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும்  திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில், ஆற்றுப் படுகைகளை அண்டி மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப் பகுதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறும்,  திணைக்களத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here