பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (06) திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பரீட்சை சான்றிதழ்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் தகவல் அமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்படும்.

இதன் விளைவாக, விண்ணப்பதாரர்கள் சனிக்கிழமை (07) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (08) ஆகிய தினங்களில் https://certificate.doenets.lk/certificate என்ற உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக இணைய சான்றிதழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக சேவை இடையூறு குறித்து கவனத்தில் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here