ஒருவரின் தனித்துவமான குணத்தை தீர்மானிப்பதில் அவர்களின் பிறப்பு ராசியை போல், இவர்களின் நட்சத்திரமும் அதிளவில் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை காதலிக்கும் போதும் சரி, திருமணத்தின் பின்னரும் சரி முழுமையாக தங்களின் கட்டுப்பட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி எந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் தங்களின் துணையை அடக்கியாள்வதில் கைத்தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்ளாக இருப்பார்கள்.
குறிப்பாக இவர்களின் ஆதிக்க குணம் அவர்களின் காதல் துணை அல்லது, கணவனிடம் தான் அதிகமாக வெளிப்படும்.
இந்த நட்சத்திர பெண்கள் இருக்கும் இடத்தில் தங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
உத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே தலைமைத்துவ குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சொல்வதை கேட்கும் தன்மை கொண்டவர்களிடம் மட்டுமே இவர்கள் நெருங்கி பழகுவார்கள்.
முக்கியமாக தங்களின் வாழ்க்கை துணையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.
அனுஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தீவிர அடக்குமுறை மற்றும் எல்லையற்ற அன்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு காதலியாக, தங்கள் காதலரின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை ஆழமாக ஆராய்வதுடன் எல்லா விடயங்களிலும் துணையை கட்டுப்படுத்துவார்கள்.
இவர்களின் இந்த ஆளும் குணம் சில இடங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும் உறவுகளில் விரிசல் ஏற்படவும் காரணமாக அமைந்துவிடும்.