இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வு 23 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே மாதவனுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டது.
கலை மற்றும் திரையுலகிற்கு அவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாதவனுக்கு இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்றபின் மனம் நெகிழ்ந்த நடிகர் மாதவன், “இந்த கௌரவம் எனக்கு பெரும் பொறுப்புணர்வை அளிக்கிறது.
இந்த அங்கீகாரத்தை சினிமாவின் உலகிற்கும், என்னுடன் பணியாற்றிய கலைஞர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.








