வைகுண்ட ஏகாதசியை போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசியும் ரொம்பவே விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விரதம் பிடிப்பவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வார்கள்.
அதே வேளை இந்த தினத்தில் யாருக்காவது சாப்பாடு கொடுத்தால் அதுவும் புண்ணியமாக போகும்.
ஏகாதசி அன்று காலையில் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தனை செய்வார்கள்.
இந்த நைவேத்தியத்தை அருகில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கினால் வளம் சேர்க்கும் என ஆச்சார்யப் பெருமக்கள் கூறுகிறார்கள்.
இது போன்று சர்வ ஏகாதசி விரதம் பற்றி வேறு என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஏகாதசிக்கு முதல் நாள் காலையில் எழுந்து வீடு முழுவதும் சுத்தம் செய்து விட வேண்டும்.
அடுத்த நாள் தசமி அன்று காலை எழுந்ததும் குளித்து விட்டு ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும்.
ஏகாதசி அன்று முழு நாள் விரதம் இருக்க வேண்டும். முழு நாள் இருக்க முடியாதவர்கள் பால்,பழம், துளசி, துளசி தண்ணீர் இப்படி ஏதாவது பெருமாளுக்கு படைத்த பின்னர் சாப்பிடலாம்.
அடுத்த நாள் துவாதசி தினம். சூரிய உதயத்திற்கு முன் அனைத்து காய்கறிகளையும் பயன்படுத்தி சமைக்க வேண்டும். அதில், நெல்லிக்காய், அகத்தி கீரை, சுண்ட வத்தல் உள்ளிட்ட உணவுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இவற்றை இறைவனுக்கு படைத்த பின்னர் நாம் சாப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சூரிய உதயத்திற்கு முன்னர் முடிக்க வேண்டும்.