தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக ‘சிக்மா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ள நிலையில் தமன் இசை அமைத்து வருகிறார்.
ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான துறையிலும் பயின்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநராக அவரது முதல் முழு நீள படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. சிக்மா படம் எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.








