Tamil News Channel

Blog Post

Tamil News Channel > தொழில் நுட்பம் > புதிய லோகோவுடன் ஜொலிக்கும் கூகுள் சர்ச்! 10 வருடத்திற்கு பிறகு நடந்த மாற்றம்..!

புதிய லோகோவுடன் ஜொலிக்கும் கூகுள் சர்ச்! 10 வருடத்திற்கு பிறகு நடந்த மாற்றம்..!

கூகுள் நிறுவனம் தனது புகழ்பெற்ற கூகிள் தேடல் (Google Search) செயலியின் லோகோவை மாற்றியுள்ளது.

புதிய பொலிவுடன் கூகுள் சர்ச்!

கூகுள் நிறுவனம் தனது புகழ்பெற்ற கூகுள் தேடல் (Google Search) செயலியின் லோகோவை கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது.

இந்த புதிய கூகுள் லோகோ ஒரு புத்துணர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது, இது பயனர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை வழங்கும்.

கூகுள் தேடல் லோகோ கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது 2015 செப்டம்பரில் தான். அந்த அப்டேட் ஒரு நவீன தோற்றத்துடன், சான்ஸ்-செரீப் எழுத்துருவில் காட்சி அளித்தது.

தற்போது, இந்த லோகோ கூகுள் தேடல் மொபைல் செயலியில் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 என்னென்ன மாற்றங்கள்

முன்னதாக, இந்த கூகுள் சர்ச் லோகோ சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு தனித்தனி வண்ணங்களைக் கொண்டிருந்தது.

தற்போது, இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றிணைந்து ஒரு நவீன கிரேடியண்ட் லோகோவாக மாறியுள்ளது, இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

இந்த புதிய கூகுள் தேடல் லோகோ அப்டேட் முதலில் ஆப்பிள் ஐபோன் பயனர்கள் மற்றும் கூகிளின் பிக்சல் போன் பயனர்களுக்கு மே 12 முதல் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் லோகோ அப்டேட் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஜிமெயில், முதன்மை தேடுபொறி, அதிநவீன ஏஐ சாட்பாட் மற்றும் பிரபலமான ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வரும் கூகுள், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *