வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தள பதிவொன்றிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்த காரணத்திற்காக இவ்வாறு பதவியில் இருந்து நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் இருக்கும் சூழலில் அதற்கான எதிர்ப்பை மறைக்கவும், விமர்சனங்களை முன்வைப்போரை தண்டிக்கவும் தேசிய மக்கள் சக்தி அரச அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here