Tamil News Channel

Blog Post

Tamil News Channel > தொழில் நுட்பம் > போலி ஐபோன் கண்டுபிடிப்பது எப்படி? வித்தியாசத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

போலி ஐபோன் கண்டுபிடிப்பது எப்படி? வித்தியாசத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

போலியான ஐபோன்களை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஐபோன்

இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஐபோனை பாவித்து வருகின்றனர். இதன் விலை சற்று அதிகமாக இருக்கின்றது.

ஐபோன்களுக்கு மார்க்கெட்டில் இருக்கும் டிமாண்ட் காரணமாக போலி மாடல்களின் பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றது.

ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான இடங்களிலிருந்து ஐபோன் வாங்கினால் எந்தவொரு பயமும், கவலையும் தேவையே இல்லை.

அதாவது அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு விற்பனையாளரிடமிருந்து ஐபோன் வாங்கினால் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்படாத கடைகளில் தொலைபேசியை பழுதுபார்ப்பதன் மூலம், கடைக்காரர்கள் அசல் தொலைபேசிகளை போலி ஐபோன்களுடன் மாற்றிக் கொள்வதும் நடைபெற்று வருகின்றது.

வழிமுறைகள் என்ன?

அசல் ஐபோன் பேக்கேஜிங் மிகவும் பிரீமியாக இருக்கும். மேலும் இதன் லோகோ சுத்தமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

ஒவ்வொரு உண்மையான ஐபோனுக்கும் தனித்துவமான சீரியல் எண் கொடுக்கப்படும். இதனை நீங்கள் ஆப்பிள் வலைத்தளத்தில் சரிபார்க்கலாம். அதுவே போலி ஐபோன்களில், இந்த எண் விடுபட்டிருக்கும் அல்லது தவறாக இருக்கும்.

உண்மையான ஐபோனின் தரம் சிறப்பாக இருக்கும். போலி ஐபோன்கள் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி இருப்பதுடன், மோசமான கலரிங் இருக்குமாம்.

அசல் ஐபோனில் IOS இயக்கு முறைமையை கொண்டுள்ளதுடன், மிகவும் மென்மையானதாகவும், வேகமாகவும் இருக்கும். அதுவே போலியில் iOS போல தோற்றமளிக்க முயற்சிக்கும். Android இயக்க முறைமையைக் கொண்டுள்ளது.

அசல் ஐபோனின் கேமரா தெளிவாகவும், கூர்மையாகவும் இருக்கும். போலி ஐபோனில் உள்ள கேமரா மங்கலாகவும், தரமற்றதாகவும் இருக்கும்.

விலை மலியாக கிடைத்தால் கவனமாக இருக்க வேண்டும். அசல் ஐபோனின் விலை எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்கும். குறைந்த விலையில் கிடைக்காதாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *