வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து பொதுபிட்டிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25-ம் திகதி இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், குறித்த நாய் ஒன்பது வயது சிறுமி ஒருவரைக் கடித்ததாலேயே கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் அந்தச் சிறுமியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொல்லப்பட்ட நாயின் தலையைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அந்த நாய்க்கு வெறிநாய் நோய் (Rabies) பாதிப்பு இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொதுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here